மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2014 | 9:45 am

மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் கட்டடங்களை நிர்மாணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான புதிய சட்டங்களை  கொண்டுவருவதற்கு இடர் முகாமைத்துவ அமைச்சு நடவடிககை எடுத்துள்ளது.

சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக  தேசிய கட்ட ஆய்வு நிலைய சட்டத்தில் புதிய திருத்தங்களை சேர்க்கவுள்ளதாக  அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்த திருத்தம் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய வலயமாக பெயரிடப்பட்டுள்ள பகுதிகளில்   நிரமாணப்பணிகள் இடம்பெறும் போது பாரியளவான உடமை மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படக்கூடும் என இடர் முகாமைத்துவ அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் அந்த நிலைமையை சீர்செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக  தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்