தனது சுயசரிதையில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டுள்ள சச்சின்

தனது சுயசரிதையில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டுள்ள சச்சின்

தனது சுயசரிதையில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டுள்ள சச்சின்

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2014 | 11:20 am

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின டெண்டுல்கருடைய சுயசரிதை நூலான ப்ளேயிங் இட் மை வே (Playing It My Way) கடந்த 6ஆம் திகதி வெளியாகியது.

புத்தகம் வெளியான நாளிலிருந்து விற்பனையில் அமோக வரவேற்பு பெற்றுள்ள அதேவேளை, பல எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

புத்தகம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரபல எழுத்தாளர் மகரந்த் வைன்கர் ”சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையில் அவர் மௌனம் சாதித்த விடயங்களே உரக்கக் கேட்கிறது என்கிறார்”

அவர் மேலும் குறிப்பிடுகையில், ”மேற்கிந்திய தீவுகளுடனான தொடரின் போது, கும்ளேயும் ஸ்ரீநாத்தும் தன் அறைக்கு வந்து ஆறுதல் கூறியதாக சச்சின் தனது சுயசரிதையில் தெரிவிததுள்ளார். ஆனால் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னரே, தோள்பட்டை காயம் காரணமாக ஸ்ரீநாத் பயணத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். சச்சின் குறிப்பிட்ட அந்த போட்டியின் போது அவர் தென்னாபிரிக்காவில் வைத்தியரை ஆலோசித்துக் கொண்டிருந்தார். அவர் எப்படி சச்சினுக்கு ஆறுதல் கூறியிருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தரவுகளை சரியாகக் கொடுக்க 3 ஆண்டுகால ஆய்வு டெண்டுல்கருக்கு, போதவில்லை போலும். துரதிர்ஷ்டவசமாக அவரது சுயசரிதை விவகாரங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறதே தவிர, அகப்பார்வையுடன் விவரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்கிறார்.

நடந்தவற்றை விவரிப்பதாக மட்டுமே நூல் இருக்க வேண்டும் என்பது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம், ஆனாலும் சச்சின் போன்ற மரியாதைக்குரிய ஒருவர் இந்திய கிரிக்கெட்டின் இருண்ட காலமான சூதாட்டம் பற்றி குறிப்பிடாமல் இருப்பது அவரது குணாம்சத்திற்கு பொருத்தமாகப்படவில்லை.

கிரிக்கெட் சூதாட்ட காலகட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக இருந்தார் சச்சின். சூதாட்டம் பற்றிய மௌனமே அவரது நூலில் உரக்கக் கேட்கிறது” என்கிறார்.

Source :- tamil.thehindu


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்