சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை கண்காணிக்க விசேட குழு

சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை கண்காணிக்க விசேட குழு

சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை கண்காணிக்க விசேட குழு

எழுத்தாளர் Staff Writer

12 Nov, 2014 | 9:52 am

சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களை கண்காணிப்பதற்கான குழுவொன்றை அவுஸ்திரேலியா நியமித்துள்ளது.

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயற்சித்த பலர் இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த முகாம்கள் நடத்தப்படுகின்ற விதம் மற்றும் அங்கு துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த குழுவை அவுஸ்திரேலிய அரசாங்கம் நியமித்துள்ளது.

அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை முதலில் அவுஸ்திரேலிய பெருநிலப்பரப்புக்கு வெளியேயிருக்கும் முகாம்களில் தடுத்து,

வைத்து முடிவெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் தொடர்ந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த தடுப்பு முகாம்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றன என்பதை பக்கச்சார்பற்ற முறையில் உறுதி செய்யக்கூடிய திறன் அரசுக்கு இருக்க வேண்டும் என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்புப் குழு தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்