லிங்கா இசை வெளியீடு நவம்பர் 16; படத்தின் முழு உரிமையும் ஈரோஸ் வசம்

லிங்கா இசை வெளியீடு நவம்பர் 16; படத்தின் முழு உரிமையும் ஈரோஸ் வசம்

லிங்கா இசை வெளியீடு நவம்பர் 16; படத்தின் முழு உரிமையும் ஈரோஸ் வசம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 6:29 pm

‘லிங்கா’ படத்தின் இசை வெளியீடு எதிர்வரும் 16ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், படத்தின் மொத்த வெளியீட்டு உரிமையையும் ஈரோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘லிங்கா’ படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரொக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 9ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அன்றைய தினம் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இந்நிலையில், ‘லிங்கா’ படத்தின் மொத்த உரிமையையும் கைப்பற்ற செளந்தர்யா ரஜினிகாந்த் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இது குறித்து செளந்தர்யா ரஜினிகாந்த் எதுவும் குறிப்பிடவில்லை.

தற்போது ‘லிங்கா’ தமிழ், தெலுங்கு மற்றும ஹிந்தி என அனைத்து மொழிகளின் இசை மற்றும் வெளியீட்டு உரிமை என மொத்தத்தையும் கைப்பற்றி இருக்கிறது ஈரோஸ் நிறுவனம். நவம்பர் 16ஆம் திகதி அன்று ‘லிங்கா’ தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழா மற்றும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

ஈரோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராக செளந்தர்யா ரஜினிகாந்த் பணியாற்றி வருவதால், அப்பா படத்தின் மொத்த உரிமையையும் கைப்பற்றி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதுமட்டுமன்றி, படத்தின் மொத்த உரிமைக்கும் பெரும் விலை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்