லயன் அறைகளுக்கு பதிலாக பாதுகாப்பான வீடுகளைக் கோரி ஆர்ப்பாட்டம்

லயன் அறைகளுக்கு பதிலாக பாதுகாப்பான வீடுகளைக் கோரி ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 9:21 pm

லயன் அறைகளுக்கு பதிலாக பாதுகாப்பான வீடுகளை அமைத்துத் தருமாறு கோரி நுவரெலியா – ஒலிபன்ட் தோட்டத்தில் இன்று பேரணியொன்று நடத்தப்பட்டது.

இந்த பேரணியில் சுமார் 300 தொழிலாளர்களும் 250 மாணவர்களும் கலந்துகொண்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

வெள்ளை மற்றும் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு இவர்கள் பேரணியில் ஈடுட்டனர்.

முத்துமாரியம்மன் கோயில் முன்பாக ஆரம்பமான பேரணி, ஒலிபன்ட் தோட்ட பொது மைதானம் வரை சென்றது.

இதன்போது, கொஸ்லாந்தை – மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுதாபம் தெரிவித்து, அக்கரப்பத்தனை – சின்னநாகவத்தை தோட்டத்தில் பேரணியொன்று நடத்தப்பட்டது.

மலையகத்தில் இவ்வாறான அனர்த்தங்களுக்கு இனிமேல் இடமளிக்காமல் பாதுகாப்பான வீடுகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்