மாத்தளையில் பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்; சந்தேகநபர் கைது

மாத்தளையில் பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்; சந்தேகநபர் கைது

மாத்தளையில் பல்கலைக்கழக மாணவி கொலை சம்பவம்; சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 1:21 pm

மாத்தளையில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொள்ளைச் சம்பவங்களுடனும்  தொடர்புடைய ஒருவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்த குறித்த மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இரண்டு குழுக்ளை நியமித்திருந்தது

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது 33 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவி வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது சந்தேகபர் அவரது தலையில் தாக்கி கொலை செய்துள்ளமையும் பின்னர் சடலத்தை வெளியே எடுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்