மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி, இந்திய பிரதமர் கலந்துரையாடல்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி, இந்திய பிரதமர் கலந்துரையாடல்

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி, இந்திய பிரதமர் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 4:55 pm

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இருநாட்டு அரச தலைவர்களும் நேற்றிரவு தொலைபேசி ஊடாக கலந்துரையாடலை மேற்கொண்டதாக ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவிக்கின்றார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்திய மீனவர்கள் ஐவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்