தாண்டவன்வெளியில் பஸ் மோதியதில் 12 வயது சிறுவன் பலி

தாண்டவன்வெளியில் பஸ் மோதியதில் 12 வயது சிறுவன் பலி

தாண்டவன்வெளியில் பஸ் மோதியதில் 12 வயது சிறுவன் பலி

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 7:06 pm

மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

தாண்டவெளி பகுதியில் குறித்த சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் பயணித்த பஸ்சொன்று மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாக மாணவர்கள் பயணித்த பஸ்சே இன்று மாலை 4.30 அளவில் விபத்து சிறுவன் மீது மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்