டயகம மேற்கில் தீ விபத்து; 22 வீடுகள் தீக்கிரை

டயகம மேற்கில் தீ விபத்து; 22 வீடுகள் தீக்கிரை

டயகம மேற்கில் தீ விபத்து; 22 வீடுகள் தீக்கிரை

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 9:55 pm

டயகம மேற்கு, 1ஆம் பிரிவு தோட்டத்தில் பரவிய தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இன்று மாலை 7 மணியளவில் பரவிய தீயினால், சுமார் 22 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாகவும், பொருட்கள் அழிவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்னொழுக்கு காரணமாக, தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்