ஜனாதிபதி மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட முடியுமா?- உயர்நீதிமன்றத்தின் விளக்கம் இன்று

ஜனாதிபதி மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட முடியுமா?- உயர்நீதிமன்றத்தின் விளக்கம் இன்று

ஜனாதிபதி மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட முடியுமா?- உயர்நீதிமன்றத்தின் விளக்கம் இன்று

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 1:41 pm

மூன்றாவது தவணை பதவிக்காலத்திற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,   தேர்தலில் போட்டியட முடியுமா என்பது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம்  இன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பான விளக்கத்தை வழங்குமாறு  கோரி   கடந்த ஐந்தாம் திகதி உயர்நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

மூன்றாம் தவணை பதவிக்காலத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் தடை ஏதும் உள்ளதா என்பது தொடர்பான விளக்கத்தை நவம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் தம்மிடம் அறிவிக்குமாறு ஜனாதிபதி தமது கடிதத்தில் கோரியிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த கோரிக்கை தொடர்பாக எழுத்துமூல விளக்கங்களை சமர்ப்பிக்குமாறு,. பிரதம நீதியரசர் மொஹான் பீரிசின் ஆலோசனைக்கு அமைய உயர்நீதிமன்ற பதிவாளர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவித்திருந்தார்.

இதற்காக கடந்த ஏழாம் திகதி பிற்பகல் மூன்று மணி வரை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்