ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 10:04 pm

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக மலையக மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.

மலையக மக்கள் முன்னணியின் அரசியற்குழு உறுப்பினர்கள் இன்று முற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்தபோது, இந்த விடயத்தினை குறிப்பிட்டதாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களின் நலனுக்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள செயற்றிட்டங்களுக்கு இதன்போது பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மக்களின் வசதிகளை அதிகரிப்பதற்கான கோரிக்கைகள் அடங்கிய ஆவணமொன்று ஜனாதிபதிக்கு இந்தச் சந்திப்பின்போது கையளிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்