சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் ஐஸ்கிறீம் நிறுவனங்களுக்கு அனுமதி; வட மாகாண சுகாதார பிரிவு தெரிவிப்பு

சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் ஐஸ்கிறீம் நிறுவனங்களுக்கு அனுமதி; வட மாகாண சுகாதார பிரிவு தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 8:47 pm

தமது பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தராது, வட மாகாண சுகாதார அமைச்சர் வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக யாழ். மாவட்ட உபஉணவு மற்றும் குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ள ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என யாழ். மாவட்ட உபஉணவு மற்றும் குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, வட மாகாண முதலமைச்சரின் செயலாளர், இந்த பிரச்சினை குறித்து ஒன்றுமே அறியாத விதத்தில் கேள்விகளை எழுப்பியமை வருத்தமளிப்பதாக யாழ். மாவட்ட உபஉணவு மற்றும் குளிர்பான உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மு.உதயசிறி தெரிவிக்கின்றார்.

யாழ். மாவட்டத்தில் ஐஸ்கிறீம் உற்பத்திகளுக்கு விடுக்கப்பட்டுள்ள தடை உத்தரவு குறித்து, வட மாகாண சுகதார பிரிவினரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, உரிய நடைமுறைகளை பிற்பற்றாது, ஐஸ்கிறீம் உற்பத்திகளை மேற்கொண்ட 59 நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்ட போதிலும், சுகாதார விதிகளை உரிய முறையில் பின்பற்றும் வண்ணம் செயற்பட்ட 29 நிறுவனங்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

சுகாதார விதிமுறைகளை பின்பற்றுகின்ற ஏனைய தரப்பினருக்கும், தாம் எதிர்வரும் காலத்தில் அனுமதி பத்திரத்தை மீள வழங்க எதிர்பார்த்துள்ளதாக வட மாகாண சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்