சாதனையின் பின்னர் காதலியுடன் மகிழ்ச்சியை பரிமாறிய கோஹ்லி (VIDEO)

சாதனையின் பின்னர் காதலியுடன் மகிழ்ச்சியை பரிமாறிய கோஹ்லி (VIDEO)

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 12:55 pm

விராட் கோஹ்லிக்கு மட்டுமல்ல, அவரது காதலியான அனுஷ்கா சர்மாவுக்கும் நேற்று மறக்க முடியாத நாள்.

நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் விராட் கோஹ்லி அரை சதம் பெற்றதன் மூலம் வேகமாக 6000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

viratkohlikissl

அண்மைக் காலமாக கோஹ்லி பிரகாசிக்கவில்லை என பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவந்தனர். இந்த சந்தர்ப்பத்தில்தான் குறித்த சதனையை படைத்துள்ளார்.

இந்த சாதனையை நிகழ்த்திவிட்டு அவருடைய காதலியான அனுஷ்கா சர்மாவுக்கு தனது மட்டை மூலமாக முத்தமழை பொழிந்தார் கோேஹ்லி.

virat2

இதேவேளை, ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ்தான் அதி விரைவாக 6000 ஓட்டங்களைக் கடந்தவர் என்ற சாதனையை வைத்துள்ளார். அதை நேற்று தாண்டி சாதனை படைத்தார் கோஹ்லி.

ஒரு நாள் போட்டிகளில் நேற்று பெற்ற 53 ஓட்டங்களுடன், மொத்தமான 6003 ஓட்டங்களை சேர்த்துள்ளார் கோஹ்லி. இதில் 20 சதங்கள், 32 அரை சதங்கள் அடக்கமாகும். அவரது துடுப்பாட்ட சராசரி 51.29 ஆகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்