கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் ஒப்படைப்பு

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் ஒப்படைப்பு

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 6:51 pm

கொஸ்லாந்தை – மீரியபெத்த பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் பின்னர் மீட்கப்பட்ட பொருட்கள் இன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பொருட்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பொருட்களில் சடலங்களில் இருந்து மீட்கப்பட்ட நகைகள் உட்பட மேலும் பல பொருட்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மண்சரிவு அபாய எச்சரிக்கையால், மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல்ல எல்கடுவ தோட்டலா தோட்டத்திலுள்ள சுமார் 70 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தோட்டலா தோட்ட மக்கள் செம்பூகவத்தையில் மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் தற்காலிகமாக தங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகி்ன்றார்.

மண்சரிவு அபாயமுள்ள லயன் குடியிருப்புகளிலிருந்து பாதுகாப்பான இடங்களில் தமக்கான வீடுகளை நிர்மாணித்து தருமாறு தோட்டலா தோட்டமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, மஸ்கெலியா னைன்சார் தோட்டதிலுள்ள 36 பேர் மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலிக முகாமில் தங்கியுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக தற்காலிக முகாமில் தாம் தங்கியுள்ள போதிலும், அதிகாரிகள் தங்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை என மஸ்கெலியா னைன்சார் தோட்டமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்