கொஸ்லாந்தை மண் சரிவால் இடம்பெயர்ந்தவர்களுக்கு இரு வாரங்களில் வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பம்

கொஸ்லாந்தை மண் சரிவால் இடம்பெயர்ந்தவர்களுக்கு இரு வாரங்களில் வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பம்

கொஸ்லாந்தை மண் சரிவால் இடம்பெயர்ந்தவர்களுக்கு இரு வாரங்களில் வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 10:35 am

கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவால் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுக்கும் நடவடிக்கை அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு பூணாகலை பகுதியில் பாதுகாப்பான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

வீடுகளின் நிர்மாணப் பணிகளுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மீரியபெத்த தோட்டத்தில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்