கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் ஏறாவூரில் கைது

கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் ஏறாவூரில் கைது

கொலை, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் ஏறாவூரில் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 4:39 pm

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் ஏறாவூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை, கொள்ளை மற்றும் தீவைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

ஏறாவூர் ஐயங்கேணி விபுலானந்தாபுரத்தை சேர்ந்த சந்தேகநபர் கடந்த எட்டு வருடங்களாக தலைமறைவாகியிருந்துள்ளார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையினை அடுத்து, சம்மாந்துறை அல்லிமுல்லைச் சந்தியில் சந்தேகநபர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

சந்தேகநபரை ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்