கல்முனையில் ”கஞ்சா லேகியம்” விற்பனை செய்தவர் கைது

கல்முனையில் ”கஞ்சா லேகியம்” விற்பனை செய்தவர் கைது

கல்முனையில் ”கஞ்சா லேகியம்” விற்பனை செய்தவர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 7:02 pm

கல்முனையில் கஞ்சா கலந்த லேகியத்தை விற்பனை செய்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் இன்று முற்பகல் 10.30 அளவில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரிடம் ஒரு கிலோகிராம் 450 கிராம் நிறையுடைய போதைப்பொருள் கலக்கப்பட்ட லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது..

சந்தேகநபருக்கு லேகியத்தை விநியோகித்தவர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபரை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில்  கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்