என்.வித்தியாதரன் எழுதிய “என் எழுத்தாயுதம்” நூல் வெளியீடு

என்.வித்தியாதரன் எழுதிய “என் எழுத்தாயுதம்” நூல் வெளியீடு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 9:45 pm

சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.வித்தியாதரன் எழுதிய “என் எழுத்தாயுதம்” நூலின் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

யுத்த காலத்தில், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய சவால்கள் தொடர்பில் என்.வித்தியாதரன் தனது நூலில் உள்ளடக்கியுள்ளார்.

நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்