எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ள ஊடகவியாலாளர் மாநாடு ஆரம்பம்

எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ள ஊடகவியாலாளர் மாநாடு ஆரம்பம்

எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ள ஊடகவியாலாளர் மாநாடு ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 10:57 am

எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ள ஊடகவியாலாளர் மாநாடு பிட்டகோட்டேயில் தற்போது நடைபெற்றுவருகின்றது.

மாதுலுவாவே சோபித்த தேரருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூண ரணதுங்க, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வோம் என்ற தொணிப்பொருளில் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு இந்த ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மாதுலுவாவே சோபித்த தேரர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ரத்து செய்வதற்காகவும், 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மீள வலுவடைய செய்வதற்காகவும் தேர்தல் முறைமையில் மாற்த்தை கொண்டு வருவதற்காகவும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிடுகையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை தற்போதைய அரசாங்கத்தின் கீழேயே மேற்கொள்ள முடியுமாயின், அதனை நிறைவேற்றுவதே மிகவும் உகந்தது என கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்