இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் சார்பில் இன்று மேன்முறையீடு

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் சார்பில் இன்று மேன்முறையீடு

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் சார்பில் இன்று மேன்முறையீடு

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 7:41 am

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் ஐவர் சார்பில் இன்று மேன்முறையீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் மரண தண்டனை விதித்திருந்தது.

இந்தத் தீர்ப்பின் நகலை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் பெற்றுக்கொண்டு அதனை மொழிப் பெயர்த்துள்ளது.

இதற்கமைய உயர்நீதிமன்றத்தில் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இன்று மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக மீனவர்களின் மேன்முறையீட்டுச் செலவிற்காக 20 இலட்சம் ரூபாவை  தமிழக அரசு  இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக இலங்கையைச் சேர்ந்த 3 சட்டத்தரணிகளையும் இந்தியா நியமித்துள்ளது.

இதேவேளை, ஐந்து மீனவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து இராமேஸ்வரம் மீனவர்கள் ஆரம்பித்த காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்