இறக்குவானை சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையத்துடன் தொடர்புடைய மூவர் கைது

இறக்குவானை சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையத்துடன் தொடர்புடைய மூவர் கைது

இறக்குவானை சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையத்துடன் தொடர்புடைய மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 1:49 pm

இறக்குவானை அட்டகலம்பன்ன பகுதியில் இயங்கிவந்த சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஆயுத உற்பத்தி நிலையத்தை நடத்திச் சென்றவரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியபோது இந்த சந்தேகநபர்கள் தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது

கடந்த நான்காம் திகதி களுத்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது குறித்த ஆயுத உற்பத்தி நிலையத்திலிருந்த ஏழு சந்தேகபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடமிருந்து 18 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்