ஆசிய பசுபிக் பொருளாதார அமைப்பு மாநாடு இன்று ஆரம்பம்

ஆசிய பசுபிக் பொருளாதார அமைப்பு மாநாடு இன்று ஆரம்பம்

ஆசிய பசுபிக் பொருளாதார அமைப்பு மாநாடு இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

10 Nov, 2014 | 8:23 am

ஆசிய பசுபிக் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்கு உலக தலைவர்கள் பீஜிங் நோக்கி பயணமாகியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ரஷ்யாவின் ஜனாதிபதி  விளாடிமிர் புட்டின் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பொட் உள்ளிட்ட தலைவர்கள் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்குபற்றவுள்ளனர்.

இதன்போது தற்போது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஐ எஸ் கிளர்ச்சியாளர்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க துருப்பினர்கள் வெளியேறியுள்ளமை மற்றும் யுக்ரேன் விவகாரங்களும் இன்று கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை மலேஷிய விமானம் யுக்ரேன் எல்லைப்பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டமை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் சீன பிரதமருடனும் அமெரிக்க ஜனாதியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்