175 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட முதல் செல்பி (selfie)

175 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட முதல் செல்பி (selfie)

175 ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்ட முதல் செல்பி (selfie)

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 5:18 pm

உலகின் முதல் ”செல்பி” (selfie) சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.

செல்பி எனப்படும் தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்வது மக்களிடையே அசுர வேகத்தில் பரவி வருகிறது. மற்றவர்கள் உதவி இல்லாமல் தனியே புகைப்படம் எடுக்கத் தொடங்கியவர்கள், தற்போது மெல்ல மெல்ல செல்பி, குரூப்பியாக மாறி வருகிறது.

இந்நிலையில், உலகின் முதல் செல்பி குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் பிலாடெல்பியா நகரில் வாழ்ந்து வந்தவர் ராபர்ட் கார்னலியஸ் (Robert Cornelius) இவர் கடந்த 1839ஆம் ஆண்டு முதல் ‘செல்பி’ போட்டோ எடுத்துள்ளார்.

தனது தந்தையின் கடையை செல்பி முறையில் புகைப்படம் எடுத்த, ரொபர்ட் அந்த புகைப்படத்தின் பின்புறத்தில் ‘முதல் ஒளிப்படம். எடுக்கப்பட்டது 1839ஆம் ஆண்டு’ என எழுதி வைத்துள்ளார்.

தனது தந்தையின் கடைக்குப் பின்னால் கமராவை வைத்து விட்டு வந்து பிரேமுக்குள் உட்கார்ந்துள்ளார். கமரா கிளிக்கிட்டதும் எழுந்தார். கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் அந்த புகைப்படத்திற்காக உட்கார்ந்திருந்தாராம் ரொபர்ட்.

2 ஆண்டுகள் புகைப்படக் கலைஞராக வலம் வந்த ரொபர்ட், அதன் பின்னர் தனது தந்தை நடத்தி வந்த விளக்கு வியாபாரத்தை கவனிக்கச் சென்று விட்டாராம்.

பெரும் செல்வந்தராக வாழ்ந்த ரொபர்ட், 1893ஆம் ஆண்டு தனது 84 வயதில் காலமானார்.

selfie


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்