12,000 ஓட்டங்களைக் கடந்தார் மஹேல; தொடரைக் கைப்பற்றியது இந்தியா

12,000 ஓட்டங்களைக் கடந்தார் மஹேல; தொடரைக் கைப்பற்றியது இந்தியா

12,000 ஓட்டங்களைக் கடந்தார் மஹேல; தொடரைக் கைப்பற்றியது இந்தியா

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 10:00 pm

இலங்கைக்கெதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுகளால் அபார வெற்றியீட்டியுள்ளது.

இந்நிலையில், இரண்டு போட்டிகள் மீதமிருக்க இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய இலங்கை அணி 48.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது

இலங்கை அணி சார்பில் மஹேல ஜயர்வத்தன 118 ஒட்டங்களைப் பெற்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 12,000 ஓட்டங்களைக் கடந்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவதாக இணைந்தார்.

243 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 44.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்