வென்னப்புவ பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

வென்னப்புவ பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

வென்னப்புவ பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 1:42 pm

வென்னப்புவ பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பல் மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து நேற்றிரவு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து மூன்று துவிச்சக்கரவண்டிகளும் , மோட்டார் சைகிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

சந்தேகநபர்களுக்கு எதிரான  வழக்கு விசாரணை நாளை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்