மீரியபெத்தயில் மீட்புப் பணிகளை நிறுத்துவதற்கு தீர்மானம்; காணாமல் போனோர் 34 பேர் மாத்திரமே

மீரியபெத்தயில் மீட்புப் பணிகளை நிறுத்துவதற்கு தீர்மானம்; காணாமல் போனோர் 34 பேர் மாத்திரமே

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 8:48 pm

கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படுகின்ற மீட்புப் பணிகளை நிறுத்தவுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மண் சரிவால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொளப்பட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மக்களின் எழுத்து மூல கோரிக்கை பெறப்பட்டு அது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினரின் ஒத்துழைப்போடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்த மற்றும் காணாமற்போனோரின் சரியான எண்ணிக்கை 34 எனவும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று  தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்