மக்களை ஏமாற்றும் யுகம் முடிவுக்கு வந்துள்ளது – ஜனாதிபதி

மக்களை ஏமாற்றும் யுகம் முடிவுக்கு வந்துள்ளது – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 7:49 pm

அரசியல் நோக்கங்களுக்காக அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து மக்களை ஏமாற்றும் யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற திட்டமிடல் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இததனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை இலக்காககொண்டு எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்க கூடாது என தாம் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதனால் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நற்பலனை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடிந்ததாகவும் ஜனாதிபதி அங்கு மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்