பாரதீய ஜனதாக் கட்சி அரங்கத்தின் முதலாவது அமைச்சரவை விரிவாக்கல் இன்று

பாரதீய ஜனதாக் கட்சி அரங்கத்தின் முதலாவது அமைச்சரவை விரிவாக்கல் இன்று

பாரதீய ஜனதாக் கட்சி அரங்கத்தின் முதலாவது அமைச்சரவை விரிவாக்கல் இன்று

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 2:28 pm

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று மேலும் சிலர் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில்  பிற்பகல்  நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர்   அமைச்சரவையை  விரிவாக்கம் செய்யப்படுவது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதீய ஜனதாக்கட்சியைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர், முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்ட 15 பேர் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பாரதீய ஜனதாக்கட்சியின்  கூட்டணிக் கட்சிகளாக தெலுங்கு தேசம், சிவசேனா ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்வதற்கு  பரிந்துரை செய்துள்ளன.

மத்திய அமைச்சரவையில் தற்போது 45 அமைச்சர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்