நோர்வூட் சாஞ்சிமலை தோட்டத்தில் 9 வயது சிறுவன் திடீர் மரணம்

நோர்வூட் சாஞ்சிமலை தோட்டத்தில் 9 வயது சிறுவன் திடீர் மரணம்

நோர்வூட் சாஞ்சிமலை தோட்டத்தில் 9 வயது சிறுவன் திடீர் மரணம்

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 1:23 pm

நோர்வூட் சாஞ்சிமலை தோட்டத்தில் ஒன்பது வயது சிறுவன் திடீர் மரணமடைந்துள்ளான்.

சாஞ்சிமலை கீழ்பிரிவை சேர்ந்த குறித்த சிறுவன் மறக்கரி தோட்டத்தில் விழுந்து கிடந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையின்  வைத்தியர் ஜே. அருள்குமரன் தெரிவிக்கின்றார்.

சிறுவனின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாகவும், பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்