நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக மக்களை அணித்திரட்டவுள்ளேன் – அத்துரலியே ரத்தனதேரர்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக மக்களை அணித்திரட்டவுள்ளேன் – அத்துரலியே ரத்தனதேரர்

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 7:43 pm

கட்சி, நிற பேதமின்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு எதிராக மக்களை அணிதிரட்டவுள்ளதாக தூய்மையாதொரு நாளைக்கான தேசிய பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்தனதேரர் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே தேரர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் வகையில் பாரிய மக்கள் கூட்டமொன்றை ஒழுங்கு செய்துள்ளதாகவும் அத்துரலியே ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி கொழும்பு முத்தையா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள்தாகவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்