தெற்கு சிங்களவர்களை வடக்கில் குடியேற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது – சி.வி.விக்கினேஸ்வரன்

தெற்கு சிங்களவர்களை வடக்கில் குடியேற்றும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது – சி.வி.விக்கினேஸ்வரன்

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 7:31 pm

தென்பகுதியில் வாழும் சிங்கள மக்களை வடமாணத்தில் குடியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளிலும் அரசாங்கம் இறங்கியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சென்னையில் கே.ஜி.கண்ணபிரான் அங்குரார்ப்பண நினைவுப் பேருரையை இன்று நிகழ்த்தியபோதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

எல்லா விதத்திலும் வட மாகாணத்தை இயங்கவிடாது தடுப்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாக இருப்பதாகவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பணத்தில் பாரிய தெருக்களை அமைத்தும், இந்திய அரசாங்கத்தின் பணத்தில் புகையிரத வழிபாதைகளை அமைத்தும், சர்வதேச நிறுவன உதவியுடன் கட்டடங்கள் கட்டியும் வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்தி விட்டதாக அரசாங்கம் மார்த்தட்டிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் வடபகுதி மக்கள் அரசாங்கத்திற்கு தக்க பாடம் புகட்டினார்கள் எனவும் வடமாகாண முதலமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்