சென்னையில் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் சட்டத்தரணிகள் மாநாடு

சென்னையில் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் சட்டத்தரணிகள் மாநாடு

சென்னையில் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் சட்டத்தரணிகள் மாநாடு

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 11:58 am

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் சென்னையில் நடைபெறவுள்ள சட்டத்தரணிகள் மாநாட்டில் இன்று தலைமை தாங்கவுள்ளார்.

சென்னை வித்தியோதயா பள்ளியில் இன்று இடம்பெறவுள்ள நிகழ்வில் பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல் என்ற தொனிப் பொருளில் வட மாகாண முதலமைச்சர் உரையாற்றவுள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வு இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறுவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறவுள்ள சட்டத்தரணிகள் மாநாட்டில் பங்கேற்கும் முகமாக இலங்கையிலிருந்து நேற்று முந்தினம் சி.வி விக்னேஸ்வரன் இந்தியா புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்