கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மேலும் இரு சடலங்கள் மீட்பு

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மேலும் இரு சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 1:17 pm

கொஸ்லாந்தை மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமற்போயிருந்த மேலும் இருவரின் சடலங்கள் இன்று   மீட்கப்பட்டன.

ஒன்பது வயது சிறுமி ஒருவரின் சடலமும், பெண்னொருவரது சடலமும் இன்று மீட்கப்பட்டதாக மத்திய பாதுகாப்பு படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.

இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகளில் குறித்த இரண்டு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

மீரியபெத்த மண்சரிவில் புதையுண்டு காணாமல்போனவர்களை மீட்கும் பணிகள் 12 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிகளை இடைநிறுத்த்துவது தொடர்பில் மக்களின் கருத்துக்களை இடர் முகாமைத்துவ அமைச்சர் எழுத்து மூலம் கோரியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்