ஐ.எஸ் ஆயுததாரிகளின் முக்கிய தலைவர்கள் ஈராக்கில் ஒன்றுகூடல்

ஐ.எஸ் ஆயுததாரிகளின் முக்கிய தலைவர்கள் ஈராக்கில் ஒன்றுகூடல்

ஐ.எஸ் ஆயுததாரிகளின் முக்கிய தலைவர்கள் ஈராக்கில் ஒன்றுகூடல்

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 9:13 am

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களின் தலைவர்கள் ஈராக்கின் மொசுல் நகரில் ஒன்றுகூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் ஐ.எஸ் சின் தலைவர் அபு பக்கர் அல் பஹ்தாதி ஈராக்கிற்கு வருகை தந்துள்ளமை தொடர்பில் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஈராக்கிலுள்ள ஐ.எஸ் ஆயுததாரிகளின் சுமார் 10 வாகனங்கள்  வான்தாக்குதல்களின் மூலம் நேற்று அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒன்றுதிரண்டுள்ள ஐ.எஸ் தலைவர்களை இலக்கு வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது.

இதேவேளை, ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்பினர்களுடன் கடமையாற்றுவதற்கு  மேலும் ஆயிரத்து 500 படையினரை அனுப்பவுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவத்துள்ளது.

அத்துடன் ஈராக் துருப்பினருக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக சுமார் 6 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு காங்கிரசிடம் கோருவதற்கும் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தீர்மானித்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்