இலங்கை மீனவர்கள் 77 பேர் தொடர்ந்தும் வெளிநாடுகளில் தடுத்து வைப்பு

இலங்கை மீனவர்கள் 77 பேர் தொடர்ந்தும் வெளிநாடுகளில் தடுத்து வைப்பு

இலங்கை மீனவர்கள் 77 பேர் தொடர்ந்தும் வெளிநாடுகளில் தடுத்து வைப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 9:24 am

இலங்கை மீனவர்கள் 77 பேர் தொடர்ந்தும் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் லால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷில் இலங்கை மீனவர்கள் 20 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களது நான்கு படகுகளையும் அந்நாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனைத் தவிர இந்தியாவில் இலங்கை மீனவர்கள் 40 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மீனவர்களின் 22 படகுகளும் இந்தியாவில் உள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மியன்மாரிலும் 17 இலங்கை மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்