இலங்கை – இந்திய மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை – இந்திய மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை – இந்திய மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 8:43 am

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான  மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டி ஹைதரபாத்திலுள்ள ரஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

இன்றைய போட்டிகளில் இரு அணிகளிலும் எவ்வித மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை என்ற போதிலும் எதிர்வரும் 2 போட்டிகளில் இலங்கை குழாத்தில் சிரேஷ்ட வீரர்கள் சிலருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

குமார் சங்கக்கார , சுராஜ் ரன்தீவ் , உபுல் தரங்க மற்றும் தம்மிக பிரசாத் ஆகியோர் இந்திய அணியுடனான 4 ஆம் 5 ஆம் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது,

இவர்களுக்கு பதிலானக லகிரு திரிமான்ன, டினேஷ் சந்திமால், அஜந்த மெண்டிஸ், ஷமிந்த எரங்க ஆகியோர் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

5 போட்டிகளை கொண்ட தொடரில் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்