இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்பட்டியலை வெளியிடுவதில் அரசு தயக்கம்

இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்பட்டியலை வெளியிடுவதில் அரசு தயக்கம்

இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்பட்டியலை வெளியிடுவதில் அரசு தயக்கம்

எழுத்தாளர் Staff Writer

09 Nov, 2014 | 12:31 pm

இந்தியாவில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்பட்டியலை வெளியிடுவதில் அரசாங்கம் தயக்கம் காட்டுவதாக பாரதீய ஜனதாக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சுப்ரமணயன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தம் என்ற காரணத்தை முன்வைத்து பெயர்கள் வெளியிடப்படாமல் இருப்பதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் இந்திய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள்  கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

இதுகுறித்த விபரங்களை வழங்குமாறு  இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சுவிட்சர்லாந்து அரசிடம் கோரி வருகின்றன. எனினும்  அந்நாட்டு அரசு விபரங்களை வழங்க மறுத்து வருகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்