போலி கடனட்டையில் பணம் மீளப்பெற்றதாக கூறப்படும் துருக்கிப் பிரஜைகள் மூவர் கைது

போலி கடனட்டையில் பணம் மீளப்பெற்றதாக கூறப்படும் துருக்கிப் பிரஜைகள் மூவர் கைது

போலி கடனட்டையில் பணம் மீளப்பெற்றதாக கூறப்படும் துருக்கிப் பிரஜைகள் மூவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2014 | 6:19 pm

போலி கடனட்டை பயன்படுத்தி, பணம் மீளப்பெற்றதாக கூறப்படும் துருக்கிப் பிரஜைகள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தமக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்றிரவு 11 மணியளவில் இரண்டு சந்தேகநபர்கள் பாமன்கடை பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.

மற்றுமொரு சந்தேகநபர் நாட்டிலிருந்து தப்பிச்செல்வதற்கு முற்பட்டபோது, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களிடம் இருந்து 04 போலி கடனட்டைகளும், மூன்று இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும், வெளிநாட்டு நாணயங்கள் சிலவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெளிநாட்டவர்கள் கடனட்டைகளின் தரவுகளை திருடி, இலங்கைகக்கு வருகைதந்து, தன்னியக்க இயந்திரங்களில் பணத்தை மீளப்பெறுகின்றமை இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்