திருகோணமலையில்  சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

திருகோணமலையில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2014 | 1:32 pm

திருகோணமலை – குச்சவெளி, கும்புறுபிட்டி கடற்பரப்பில் சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், இதன்போது மேலும் இரண்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டைனமைட் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தப்பிச் சென்றுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்