கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மேலும் இரு சடலங்கள் மீட்பு

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மேலும் இரு சடலங்கள் மீட்பு

கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவு; மேலும் இரு சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2014 | 3:01 pm

கொஸ்லாந்தை, மீரியபெத்த மண்சரிவில் புதையுண்டிருந்த மேலும் இருவரது சடலங்கள் இன்று முற்பகல் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மண்ணில் புதையுண்டு காணாமல்போனவர்களை மீட்கும் பணி பத்தாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சடலங்களை மீட்கும் பணிகளுக்காக அந்த பகுதியில் இருந்து தற்போது இடம்பெயர்ந்துள்ளவர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா குறிப்பிடுகின்றார்.

koslanda2

மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்கள், அனர்த்தத்தை நேரில் கண்டவர்கள் மற்றும் சடலங்களை அடையாளம் காண்பதற்காக துல்லியமான தகவல்களை வழங்கக்கூடியவர்களின் உதவிகளும் பெறப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

14 பேர் இதுவரை தகவல்களை வழங்கியுள்ளதாகவும், அதன் பிரகாரம் இருவரின் சடலங்களை கண்டுபிடிக்க முடிந்ததாக மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி கூறினார்.

இதற்கமைய பெண்ணொருவரின் சடலமும், பிள்ளையொன்றின் சடலமும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சடலங்களை மீட்க்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக மேஜர் ஜெனரல் மனோ பெரோ தெரிவிக்கின்றார்.

இந்த இரண்டு சடலங்களுடன், இதுவரை கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர மண்ணில் புதையுண்டு காணாமல்போனவர்களின் மேலும் சில உடல் அவயவங்களும் முன்னர் மீட்கப்பட்டிருந்ததாக மத்திய பாதுகாப்பு கட்டளைத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மழையுடனான வானிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக 9000 இற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்