கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்தியவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்தியவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட் கடத்தியவர் கைது

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2014 | 1:21 pm

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து வருகைதந்த காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவர் இன்று அதிகாலை 1.45 அளவில் விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவிக்கின்றார்.

சந்தேகநபரிடம் இருந்து 800 கிராம் நிறையுடைய 8 தங்க பிஸ்கட்களை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நபர் நான்கு தங்க பிஸ்கட்களை பழைய மின் அழுத்தி ஒன்றினுள் சூட்சுமமாக மறைத்திருந்ததுடன், எஞ்சிய நான்கு தங்க பிஸ்கட்களை தனது பயணப் பொதியிலும் மறைத்து நாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்