உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இன்று 60ஆவது பிறந்த நாள்

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இன்று 60ஆவது பிறந்த நாள்

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு இன்று 60ஆவது பிறந்த நாள்

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2014 | 10:30 am

புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் கமல்ஹாசனின் 60ஆவது பிறந்த நாள் இன்றாகும்.
1954ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருக்கும் பரமக்குடியில்
வழக்கறிஞராக இருந்த டி.சீனிவாசனுக்கும், ராஜலக்ஷ்மி அவர்களுக்கும் மகனாக பிறந்த கமல்ஹாசன்.
படிப்பைத் தவிர மற்ற கலைகளில் ஆர்வம் அதிகமிருந்ததால், அதிக நேரத்தை அதில் செலவிட்டார்.

1369380930_44301

தனது திரையுலக வாழ்க்கையை, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய கமல்ஹாசன் . 1960இல் வெளியான ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படத்தில்  நாயகனாக அறிமுகமானர்.

கமல்ஹாசன் 4 தேசிய விருதுகள், 19 பில்ம்பேர் விருதுகள் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளை வென்றுள்ளார்,

இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான எக்கடமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார். நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர், பின்னணிப்பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.

கமல்ஹாசன், திரையுலக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டத் திரைப்படங்களாக களத்தூர் கண்ணம்மா, 16 வயதினிலே,மூன்றாம் பிறை, நாயகன், அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன், குணா, மகாநதி, தேவர் மகன், இந்தியன், அவ்வை சண்முகி, ஆளவந்தான், தெனாலி, தசாவதாரம்,விஸ்பரூபம் போன்ற திரைப்படங்களை குறிப்பிடலாம்.

kam20

இல்லற வாழ்க்கையில்1978ல், வாணி கணபதி என்பவரை மணமுடித்த கமல்ஹாசன், பத்து ஆண்டுகள் கழித்து அவரிடம் விவாஹரத்துப் பெற்று, சரிகா என்ற நடிகையை மணமுடித்தார். அவர்களுக்கு, ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா என்ற மகள்கள் உள்ளனர்.

New-Look-of-Kamal-Hasan-in-ViswaRoopam

பின்னர், சிம்ரனுடனான தொடர்பின் காரணமாக, சரிகா அவர்கள், கமலிடம் விவாஹரத்துக் கோரினார். 2002இல் சரிகாவுடனான உறவிலிருந்து விடுதலைப் பெற்ற பின், 2005லிருந்து கௌதமியுடன் இணைந்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.

Kamalll

கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்