இந்தியாவின் விசாக பட்டிணத்தில் மீண்டும் புயல் அபாய எச்சரிக்கை

இந்தியாவின் விசாக பட்டிணத்தில் மீண்டும் புயல் அபாய எச்சரிக்கை

இந்தியாவின் விசாக பட்டிணத்தில் மீண்டும் புயல் அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2014 | 4:44 pm

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு மீண்டும் புயல் அபாய  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான ஹுத் ஹுத் புயல் தாக்கியதால் கடலோர ஆந்திர மாநிலத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

புயலினால் தாக்கப்பட்ட பகுதியில்  புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து உள்ளதாலும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால்   மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கடலோர ஆந்திரமாவட்டங்களான விசாகப்பட்டினம், விஜய நகரம், ஸ்ரீகாகுளம் மற்றும் தெலங்கானாவில் உள்ள சில மாவட்டங்களில் புயலின் பாதிப்பு இருக்கும் என விசாகப்பட்டின வானிலை மையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்