ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான புதிய கண்காணிப்பு கட்டமைப்புக்கள்  – கடற்றொழில் அமைச்சு

ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான புதிய கண்காணிப்பு கட்டமைப்புக்கள் – கடற்றொழில் அமைச்சு

ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான புதிய கண்காணிப்பு கட்டமைப்புக்கள் – கடற்றொழில் அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

07 Nov, 2014 | 9:34 am

ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான கண்காணிப்பு கட்டமைப்புகளை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சுமார் மூவாயிரம் ஆழ்கடல் படகுகளில் இதற்கான உபகரணங்கள் பொருத்தப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டி.எம்.ஆர். திசாநாயக்க தெரிவிக்கின்றார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இதுதொடர்பான உடன்படிக்கைகள் எட்டப்படும் என்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவர்கள் தமது கடற்றொழில் நடவடிக்கைகளை முறையாகவும், நவீன முறையிலும் முன்னெடுக்கும் நோக்கில் இந்த படகு கண்காணிப்பு கட்டமைப்பு உபகரணங்களை பொருத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மையில் சர்ச்சையை தோற்றுவித்த இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட நிபந்தனையை நிறைவேற்றுவதாகவும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மீன்பிடி படகுகளுக்கான “படகு கண்காணிப்பு கட்டமைப்பு” உபகரணங்களை பொருத்துவதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களம் மற்றும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த படகு கண்காணிப்பு கட்டமைப்பு உபகரணங்களை ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் பொருத்துவதன் மூலம், இலங்கையில் மீன்பிடி நடவடிக்கைகளை மேலும் விஸ்தரிப்பதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்