English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
04 Nov, 2014 | 7:46 pm
ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புனரமைப்பு செய்வதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்பில் அண்மையில் வௌிவிவகார அமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைத்த ஆவணம் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் வட மத்திய மாகாண சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க, இலங்கைக்கான சுவிஸர்லாந்தின் தூதரகத்திடம் கடிதமொன்றின் மூலம் வினவியுள்ளார்.
பாரதூரமான பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ள இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சர், சபையில் முன்வைத்த ஆவணம் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை உறுதிப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை புனரமைத்தல் தொடர்பிலான கொடுக்கல் வாங்கல் குறித்து நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளினால் தயாரிக்கப்பட்ட கணக்காய்வு அறிக்கைக்கு ஏற்ப, ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரான பி.ரி.துறைராஜா, எல்.ரி.ரி.ஈ அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு 2011ஆம் ஆண்டு 10ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் சுவிஸர்லாந்து பெடரல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக வசந்த சமரசிங்க தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு பின்னர் அந்த கணக்காய்வு அறிக்கை தொடர்பில் பூரண தௌிவூட்டலை தான் மேற்கொண்டதாகவும், அதற்கு பதில் வழங்கும் வகையில் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் கடந்த 30ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆவணமொன்றை சமர்ப்பித்ததாகவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
துறைராஜா குற்றச்செயல்களுடன் தொடர்புபடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ள அந்த ஆவணம், சுவிஸர்லாந்தின் அங்கீகரிக்கப்பட்ட ஓர் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ளதா, என வசந்த சமரசிங்க, இலங்கைக்கான சுவிஸர்லாந்தின் தூதுவராலயத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வினவியுள்ளார்.
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதற்கு முன்னர் தெரிவித்த விடயங்களுக்கு ஏற்ப சுவிஸர்லாந்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவரினால் இது தொடர்பில் இலங்கையின் இராஜதந்திர அதிகாரி ஒருவருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளாரா எனவும் வசந்த சமரசிங்க கேட்டுள்ளார்.
இதேவேளை, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்டறிந்து கொள்ளும் வகையில் தான் வௌிவிவகார அமைச்சருக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.
08 Mar, 2021 | 02:40 PM
23 Feb, 2021 | 09:02 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS