English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
04 Nov, 2014 | 9:52 pm
மண்சரிவு மற்றும் கடும் மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, சுமார் ஆயிரத்து 800 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மாவட்டங்கள் சிலவற்றின் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளமையினால், மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் சிரேஷ்ட புவியியல் நிபுணர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதேவேளை, கடும் மழை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிக மழையுடன் கூடிய வானிலையை அடுத்து புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இவ்வாறு ஏற்பட்டுள்ள வௌ்ளப்பெருக்கினால் குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 55 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 191 பேர் இடம்பெயர்ந்து நான்கு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.
இதைத்தவிர, புத்தளம், முந்தல், சிலாபம், மஹவெவ ஆகிய பகுதிகளிலுள்ள பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
வௌ்ளப் பெருக்கினால், முந்தல் சிரிமாபுர பகுதியே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19 Sep, 2020 | 03:51 PM
22 May, 2020 | 07:09 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS