English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
04 Nov, 2014 | 1:26 pm
ண்சரிவு அபாயத்தினால் இடம்பெயர்ந்து, அக்கரபத்தனை – போர்ட்மோர் பாடசாலையில் தற்காலிகமாக தங்கியுள்ள மக்கள் தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
அக்கரப்பத்தனை, பெவரலி போர்ட்மோர் தோட்டத்தில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்த 17 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 87 பேர் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
தமக்கான மாற்று வசதிகள் எதுவும் தோட்ட நிர்வாகத்தினால் இதுவரை வழங்கப்படவில்லை என போர்ட்மோர் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அம்பகமுவை பிரதேச சபைக்கு உட்பட்ட சமனல்கம பகுதியில் அமைந்துள்ள 9 குடியிருப்புக்களின் சுவர்களின் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மண்சரிவு ஏற்படும் என்பதால், குறித்த குடியிருப்புக்களில் உள்ள மக்கள் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு புதிய காணிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது குறித்த மக்களுடன் அதிகாரிகள் இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இவர்களுக்கு புதிய காணிகளை பெற்றுக் கொடுப்பது குறித்து விரைவில் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் அதிகாரிகளை வரவழைத்து குடியிருப்புக்களில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ள சமனல்கம பகுதி தொடர்பில் ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
19 Sep, 2020 | 03:51 PM
21 May, 2020 | 08:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS