சீனக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளமை தொடர்பில் கலக்கமடையத் தேவையில்லை – சீனா

சீனக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளமை தொடர்பில் கலக்கமடையத் தேவையில்லை – சீனா

சீனக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளமை தொடர்பில் கலக்கமடையத் தேவையில்லை – சீனா

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2014 | 1:16 pm

சீனக் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளமை தொடர்பில் கலக்கமடையத் தேவையில்லை என சீனா தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரப்புவதற்கும், கப்பல் பணியாளர்கள் ஓய்வு எடுப்பதற்கும் நீர்மூழ்கிப் கப்பல் மற்றும் போர்க் கப்பலை வெளிநாடுகளின் துறைமுகத்தில் நங்கூரமிடுதல் சர்வதேச ரீதியில் இடம்பெறும் ஒரு பொதுவான விடயமென சீன பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடுகின்றது.

கடந்த 31 ஆம் திகதி இலங்கை துறைமுகத்தை வந்தடைந்த சீனாவின் யுத்த கப்பலும், நீர்மூழ்கிக் கப்பலொன்றும் எதிர்வரும் 05 ஆம் திகதிவரை நாட்டின் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ளன.

இதேவேளை, எரிபொருள் நிரப்புவதற்காகவும், பணியாளர்கள் ஓய்வு எடுப்பதற்காகவும் குறித்த கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இதனால் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சிக்கல்களும் ஏற்படாதென கடற்படையின் பேச்சாளர் கூறினார்.

சீனாவின் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளமை தொடர்பில் இந்தியா அதிக கவனம் செலுத்தியுள்ளதாக, இந்திய உயரதிகாரிகளை மேற்கோள்காட்டி, அந்நாட்டு ஊடகங்கள் இதற்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்