கொஸ்லாந்தை மீரியபெத்தயில் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்புப் பணி தொடர்கிறது – மனோ பெரேரா

கொஸ்லாந்தை மீரியபெத்தயில் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்புப் பணி தொடர்கிறது – மனோ பெரேரா

கொஸ்லாந்தை மீரியபெத்தயில் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் மீட்புப் பணி தொடர்கிறது – மனோ பெரேரா

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2014 | 8:02 am

கொஸ்லாந்தை – மீரியபெத்த பகுதியில் மண்சரிவில் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்படவுள்ளன.

மழையுடனான வானிலை நிலவியபோதிலும், மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக மத்திய பாதுகாப்பு படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் படையணி, சுமார் 10 பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி மீட்புப் பணிகளை முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இராணுவத்தினர், விமானப் படையினர், பொலிஸார் என 500க்கும் மேற்பட்டவர்கள் மீரியபெத்த பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மண்ணுக்குள் புதையுண்டுள்ளவர்களை மீட்கும் பணிகளும், வீதியை சீரமைக்கும் பணிகளும் மழையையும் பொருட்படுத்தாது, இன்றும் தொடருமென மேஜர் ஜெனரல் மனோ பெரேரா மேலும் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்