கொஸ்லாந்தை சென்று பார்வையிட்டுள்ளார் சி.வி.விக்னேஷ்வரன்

கொஸ்லாந்தை சென்று பார்வையிட்டுள்ளார் சி.வி.விக்னேஷ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

04 Nov, 2014 | 7:08 pm

கொஸ்லாந்தை – மீரியபெத்த மண்சரிவு இடம்பெற்ற பகுதிகளை வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரன் பார்வையிட்டுள்ளார்.

வடமாகாண முதலமைச்சருடன் மேல் மகாண சபை உறுப்பினர் மனோ கணேஷன் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் பிரிவினருடன் வட மாகாண முதலமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

பின்னர், மீரியபெத்த பகுதியில் இடம்பெயர்ந்து தங்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள கொஸ்லாந்தை கணேஷா வித்தியாலயத்திற்கு முதலமைச்சர் சென்றுள்ளார்.

அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்